சேவைபெறுநர் எவருக்காயினும் எங்களுடன் உள்ள சந்திப்பின் பொழுது நேர்முகமாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ மொழிபெயர்ப்பு உரையாடல் சேவைகள் தேவைப்படும் என்றால், அந்தச் சந்திப்பு நேரத்துக்கு நாங்கள் இலவசமான முறையில் அவ்வாறான சேவைகளை வழங்குகிறோம். அத்துடன் உங்களுடன் நாம் தொலைபேசி வழியாக சந்திப்புகளை ஒழுங்கு செய்யும் பொழுதும் மொழிபெயர்ப்பு உரையாடல் செய்வோரின் உதவியை வழங்க முடியும். உங்களுக்கான சிகிச்சை முறை நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் உங்களுடனும் எமது மருத்துவ தாதிச் சேவையினருடனும் இணைந்து உங்கள் நிலைமையை நாம் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் மொழிபெயர்ப்பு உரையாடல் வசதியை கொடுக்க முடியும். நாம் வழங்கும் மருத்துவ ஆலோசனைத் திட்ட நிகழ்வுகளின் பொழுதும் உங்களுக்கு மொழிபெயர்ப்பு உரையாடல் சேவைகள் தேவைப்படும் என்றால், அதனையும் நாம் ஏற்பாடு செய்ய முடியும்.
உங்களுக்கு மொழிபெயர்ப்பு உரையாடல் வசதி தேவைப்படுகிறது என்றால் தயவுசெய்து எங்களை 647-370-3203 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து நீங்கள் பேசுகின்ற மொழியின் பெயரையும் உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் (ஆங்கிலத்தில்) கூறி செய்தி விட்டால், நாங்கள் ஒரு மொழிபெயர்ப்பு உரையாடல் செய்பவரின் துணையுடன் உங்களை மீண்டும் தொலைபேசியில் அழைப்போம்.